லியோவுக்கு கூட்டம் குறைஞ்சிருச்சு... ஆனா ஆஸ்பத்திரி எல்லாம் ஹவுஸ்ஃபுல்லா இருக்கு - செல்லூர் ராஜு செம கிண்டல்!

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

விஜய் நடித்து வெளியாகியுள்ள ’லியோ’ படத்திற்கு கூட்டம் குறைந்து விட்டது. ஆனால், சுகாதாரக் கேடு காரணமாக மருத்துவமனைகள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று நேரில் பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரையில் பல்வேறு சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன, சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை, மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் போல செயல்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2 அமைச்சர்களும் மேற்கொள்ளவில்லை.

மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது. விஜய் நடித்த லியோ படத்திற்கு கூட கூட்டம் குறைந்துள்ளது. ஆனால் மதுரையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது.

மதுரையில் 2 அமைச்சர்களும் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகையாற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம். உள்ளூரில் உள்ளவனுக்கு சோறு போட வக்கில்லை, வெளியூர்க்காரனுக்கு பாலும், பன்னீரும் பஞ்சு மொத்தையும் தர போகிறோம் என்கிறார்கள்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

திமுக ஆட்சியில் கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் கலெக் ஷன், கரப்ஷன். மதுரை மாநகராட்சி செயலிழந்து போய்விட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்து அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறு கோயில்கள் செயல்படுகிறது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?. அறநிலையத் துறையில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்.

யார் யாரோ ஆட்சிக்கு வரப் போகிறோம் எனச் சொல்லும் போது விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை, 2026 ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கொண்ட அதிமுக ஆட்சி அமையும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in