எம்.பியை எம்.எல்.ஏ என தவறாகப் போஸ்டர் அடித்துப் பாராட்டிய காங்கிரஸ் கட்சி!

எம்.பியை எம்.எல்.ஏ என தவறாகப் போஸ்டர் அடித்துப் பாராட்டிய காங்கிரஸ் கட்சி!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை பாராட்டி காங்கிரஸ் கட்சியினர் அச்சிட்டு ஒட்டியிருக்கும் போஸ்டரில், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்குப் பதிலாக சட்டமன்ற உறுப்பினர் எனப் போட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் வசம் கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு என மூன்று தொகுதிகள் உள்ளன. இதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸ் வசமே உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

விஜய் வசந்த் அண்மையில் நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் தண்ணீர் விட வேண்டும், குமரி மாவட்டம் ஏவிஎம் கால்வாயைத் தூர்வாரி படகுப்போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி விஜய் வசந்த் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு கொடுத்துவந்தார். மனு கொடுத்து வந்ததைப் பாராட்டி விஜய் வசந்திற்கு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அதில் விஜய் வசந்த் எம்.பி என்னும் பெயரின் கீழ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்குப் பதிலாக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என அடித்து ஒட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவின் தளவாய் சுந்தரம் ஆவார். காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.பியின் பெயருக்குக் கீழ் அவரை எம்.எல்.ஏ எனத் தவறாக அச்சடித்திருப்பது பகடி ஆகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in