இருக்கைக்கு சண்டை போட்ட அதிமுக- திமுக கவுன்சிலர்கள்: செய்தியாளர்களை தாக்கியதால் பரபரப்பு

இருக்கைக்கு சண்டை போட்ட அதிமுக- திமுக கவுன்சிலர்கள்: செய்தியாளர்களை தாக்கியதால் பரபரப்பு
செய்தியாளர்களின் கேமராவை வெளியே தள்ளி கதவை சாத்தும் நபர்

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கிய திமுகவினரால் பரபரப்பு.

மதுரை மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. மேயர், ஆணையாளர் வருகை தராத நிலையில், இருக்கை ஒதுக்கீட்டில் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கிடையே வளாகத்தினுள் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்கு சென்றனர்.

அப்போது, அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை மேயர் அறை முன்பாக இருந்த திமுகவை சேர்ந்த சிலர் திடீரென செய்தியாளர்களை தாக்கி கேமராவை காலால் எட்டி உதைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சி மேயர் அறையானது தொடர்பில்லாத நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துக்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.