முதல்வர் ஸ்டாலின் இன்பச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்: ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிமுதல்வர் ஸ்டாலின் இன்பச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்: ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, கடந்த மார்ச் மாதம் தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றது போல இந்த முறையும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார் என எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் இருந்து 9 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் இன்று காலை புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், முதலீடுகளை ஈர்க்க இந்த வெளி நாடு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

முதல்வரின் பயணத்தை விமர்சனம் செய்தும் கடந்த அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் முதல்வர் ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன.

இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதல்வர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை.

தொழில் சுற்றுலா என்று விடியா அரசின் முதலமைச்சருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தமிழக மக்களைப் பற்றி கவலையில்லாமல் மாறிமாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட விடியா அரசின் முதல்வர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே தங்களது ஊழல் பணத்தை முதலீடு செய்ய குடும்பத்துடன் துபாய்க்கு சென்று வந்தபின், இப்போது முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதுபோல், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்காக மகன் மற்றும் மருமகன் ஆகியோர் லண்டன் பயணம் சென்று வந்த நிலையில், தற்போது முதல்வர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் என்று வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறாரோ என்று ஊடகங்கள் மற்றும் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டுமென்று விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in