ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென நுழைந்த முதல்வரின் கார்... பதறிய அதிகாரிகள்!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென நுழைந்த முதல்வரின் கார்... பதறிய அதிகாரிகள்!

முதல்வரின் கள ஆய்வு திட்டத்தின் அடிப்படையில் இன்று மறைமலைநகர் ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீரென ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர்
பொதுமக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை மறைமலைநகருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார்.

அப்போது செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திடீரென முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in