நிர்மலா சீதாராமன் சொல்வது பொய்: ஜிஎஸ்டி விவகாரத்தில் கொந்தளிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்நிர்மலா சீதாராமன் சொல்வது பொய்: ஜிஎஸ்டி விவகாரத்தில் கொந்தளிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்!

’ஜி.எஸ்.டி விவகாரத்தில் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய பங்குகளை மத்திய அரசு முறையாக வழங்காமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது’ என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தரமணி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் டெக்னோ லெக்ஸ் சைபர் கிளப் தொடக்க விழாவில் தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தொழில்நுட்பம் எப்படி வளர்ந்து வருகிறதோ அது போன்று சைபர் செக்யூரிட்டி பிரச்சினைகளும் வளர்ந்து வருகிறது. அதற்குப் புதிய சட்டங்களை உருவாக்கி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி மத்திய அரசுக்குக் காலதாமதம் இல்லாமல் செலுத்துகிறோம். ஆனால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையைக் காலதாமதத்தோடு வழங்கி வருகின்றனர். மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி வருவாயை பிரித்து வழங்குவதில் மிகப்பெரிய பாரபட்சம் இருக்கிறது என்பது நம் குற்றச்சாட்டு. வரியை செலுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதை வேண்டுமானாலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசலாம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டார். அதனால் அதனை ஒன்றும் செய்ய முடியாது. மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் நிச்சயம் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in