பொறியாளரிடம் 33 லட்சம் மோசடி: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, மனைவி, மகள் மீது வழக்குப்பதிவு!

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

நிலமோசடி புகாரில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி, மகளும் கவுன்சிலருமான ஸ்ரீலிஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் கட்சியில் இருந்தும் கட்டம் கட்டப்பட்டார். ரியல் எஸ்டேட் புள்ளியான நாஞ்சில் முருகேசன் பெருந்தொகை செலவு செய்து மீண்டும் கட்சியில் ஐக்கியமானார். அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் அவரது மகள் ஸ்ரீலிஜாவை அரசியலுக்கு அழைத்துவந்தார். ஸ்ரீலிஜா நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக ஸ்ரீலிஜாவே முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி தங்க தேவிகா, மகள் ஸ்ரீலிஜா, நாகர்கோவிலைச் சேர்ந்த பினோ தேவகுமார் ஆகிய நான்கு பேரும், தன்னிடம் புத்தேரி பகுதியில் நிலம் தருவதாகக்கூறி 33 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புத்தேரி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார் என்பவர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், அவரது மகள் கவுன்சிலர் ஸ்ரீலிஜா உள்பட 4 பேர் மீதும் மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in