அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகள் சரிவர இயங்காதது இதனால்தான்... காரணத்தை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் தான் பேருந்துகளை சரிவர இயக்க முடியவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில்  பல்வேறு தடங்களில் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல வழித்தடங்களில் இரவு நேர பேருந்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டன. 

இந்த நிலையில் நடப்பு  சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று  உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அப்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே பேருந்துகளை சரிவர இயக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

"கடந்த அதிமுக ஆட்சியில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்களை பணியமர்த்தாத காரணத்தினால் பேருந்துகளின் பல வழித்தடங்கள் நிறுத்தப்பட்டன. மேலும் பேருந்துகளை சரிவர இயக்க முடியவில்லை.  தற்போது  போக்குவரத்துத்துறை சார்பாக 685 ஓட்டுநர், நடத்துனர்கள்  புதிதாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் நிறுத்தப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று  சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in