நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்நாளை தாக்கல் ஆகிறது தமிழக பட்ஜெட்

நாளை தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த முக்கிய வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.1000, மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஒரு சில சலுகைகள்  உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை வழங்குவது எப்போதிலிருந்து என்ற அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று தெரிகிறது.  இது குறித்து கடந்த 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப் பட்டுள்ளது. நிதி நிலைமை ஓரளவு சீராகி இருக்கிறது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் மேலும் பல சலுகை அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம்  21ம் தேதி  2023-2024ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

நடப்பு கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா திரும்ப  நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.  இரண்டாவது முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்  சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும்போது அவரால் அதை  நிராகரிக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார்.  இதுதவிர பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்தும் சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்

நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். இந்த கூட்டம் 4 அல்லது 5 நாட்கள் வரை நடைபெறும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in