அதிமுகவினர் நான்கு பிரிவாக உள்ளனர்: புதுக்கணக்கு சொல்லும் பேரவைத் தலைவர் அப்பாவு

அதிமுகவினர் நான்கு பிரிவாக உள்ளனர்: புதுக்கணக்கு சொல்லும் பேரவைத் தலைவர் அப்பாவு

அதிமுகவினர் நான்கு பிரிவாக உள்ளனர். அவர்கள் பிரச்சினையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

16-வது சட்டப் பேரவை நடவடிக்கை குறிப்புகள் மற்றும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டப் பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அதிமுக உட்கட்சி பிரச்சினை. அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல. சட்டப்பேரவை அதிமுக துணைத்தலைவர் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவரே கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வேறு, நீதிமன்றம் வேறு.ஓபிஎஸ், இபிஎஸ் கடிதங்கள் குறித்து, யார் மீதும் விருப்பு, வெறுப்பில்லாமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை இருக்கும். நான்கு பிரிவாக அதிமுகவினர் உள்ளனர். அவர்கள் பிரச்சினையில் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in