ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த அடி... கேஜ்ரிவால் ஆதரவு போராட்டத்தை புறக்கணிக்கும் எம்பி-க்களால் பரபரப்பு

கேஜ்ரிவால் ஆதரவு ஆம் ஆத்மி போராட்டம்
கேஜ்ரிவால் ஆதரவு ஆம் ஆத்மி போராட்டம்

அர்விந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிரான கட்சி நடவடிக்கைகளை, ஆம் ஆத்மி எம்பிக்களில் பெரும்பாலானோர் புறக்கணித்ததால் டெல்லியில் புதிய அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளாருமான அர்விந்த் கேஜ்ரிவால் கைதினை கண்டிக்கும் வகையில் அக்கட்சியினர் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேரடி போராட்டங்கள் மட்டுமன்றி இணையவெளியிலும் அவை நீடித்து வருகின்றன.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

அவர்களில் மாநிலங்களவை எம்பிக்கள் பலர் திடீரென சைலண்ட் மோடுக்கு சென்றிருப்பது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மியிலிருந்து பலரும் விலகி வருவதன் மத்தியில், மேலும் பல விக்கெட்டுகள் சாயும் என்ற சந்தேகத்தையும் இவை எழுப்பியுள்ளன.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் மார்ச் 21 அன்று அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது முதலே ஆம் ஆத்மி கட்சியின் பலர் அமைதியில் உறைந்திருப்பதும் வெளிப்பட்டுள்ளது. அது அமைதியா அல்லது மத்திய விசாரணை அமைப்புகள் பாயும் என்ற அச்சமா என்ற ஐயத்தையும் இவை கிளப்பியுள்ளன.

ஹர்பஜன் சிங், அசோக் குமார் மிட்டல், சஞ்சீவ் அரோரா, பல்பீர் சிங் மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகிய மாநிலங்களவை எம்பிக்கள் இந்த வகையில் அமைதிக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக ராகவ் சதா மற்றும் சந்தீப் பதக் தவிர்த்து கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எவரும், கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக வாய்கூட திறக்கவில்லை.

போராட்டங்களில் முன்நிற்கும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ்
போராட்டங்களில் முன்நிற்கும் ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சௌரப் பரத்வாஜ்

அது மட்டுமன்றி கட்சி அறிவுறுத்திய, கேஜ்ரிவால் ஆதரவு மற்றும் மோடி எதிர்ப்புகான சுயவிவரக் குறிப்புகள் மற்றும் படங்களையும், இவர்கள் தங்களது சமூக ஊடகக் கணக்குகளில் இன்னமும் மாற்றவில்லை. புதுமாப்பிள்ளை எம்பி-யான ராகவ் சதா கண் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றவர் அங்கிருந்தபடியே, ஓரிரு கேஜ்ரிவால் ஆதரவு சமூக ஊடகப் பதிவுகளை வெளியிடுவதோடு அமைதியாகி உள்ளார்.

இன்னொரு பிரபல எம்பியான சுவாதி மாலிவால் அமெரிக்காவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரும் ராகவ் சதா பாணியில் சமூக ஊடகப் பதிவுகளோடு அடக்கி வாசிக்கிறார். ஆம் ஆத்மியின் டெல்லி எம்பிக்கள் எவரும் பாஜகவுக்கு எதிராக மற்றும் ஆம் ஆத்மி சார்பில் அறிக்கை எதையும் வெளியிடாததும் கட்சியினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

அர்விந்த் கேஜ்ரிவால் சிறை சென்றால் ஆம் ஆத்மி கட்சி தேய்ந்து, கடைசியில் இல்லாது போய்விடும் என்ற பாஜகவின் எச்சரிக்கை உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்திலும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   


பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!

வைகோ மருமகன் பாஜகவில் இணைந்தார்... மதிமுகவினர் அதிர்ச்சி!

6 நிமிஷ வீடியோவுக்கு ரூ.60 கோடி செலவு... மாஸ் காட்டும் ‘புஷ்பா2’

அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர விட்ட நடிகை.... பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு!

குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in