உதயமாகிறது 3வது அணி! கொளுத்திப் போடும் அகிலேஷ்! சிக்கலில் `இந்தியா’ கூட்டணி!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான் என்பதால் இந்திய நாட்டுக்குப் புதிய சித்தாந்தம், புதிய கட்சி, புதிய கூட்டணி ஆகியவை தேவை. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், மத்தியில் பிடிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளது, இந்தியா கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

பல கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஆளும் பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. ஆரம்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு, கூட்டணி என இந்தியா கூட்டணி சிக்கலை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு சீட் கொடுக்க மறுத்ததால் அகிலேஷ் யாதவும், தொகுதிப் பங்கீடு முயற்சி தோல்வியடைந்ததால் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியிடம் பெரும் ஏமாற்றமடைந்திருக்கின்றன. மேலும், ஐந்து மாநிலத் தேர்தல்களால் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாகக் கொண்ட `PDA' எனும் தனது புதிய கூட்டணிக்கான அழைப்பை அறிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகர்ப் பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், பேசிய அகிலேஷ் யாதவ், ’’இந்திய நாட்டுக்குப் புதிய சித்தாந்தம், புதிய கட்சி, புதிய கூட்டணி ஆகியவை தேவை. அதற்காக, புதிய பி.டி.ஏ கூட்டணி அவசியம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மத்தியில் பி.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் twitter

பாஜக மற்றும் காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆகிய இரண்டும், எங்கள் கூட்டணியிடம் தோற்கும் என நம்புகிறேன். காங்கிரஸ் கட்சி இரட்டைப் பேச்சுக்குப் பெயர் பெற்றது. பாஜகவின் `பி’ டீமாகவே செயல்படுகிறது. உண்மையில் காங்கிரஸ் ஒரு தந்திரமான கட்சி. சமாஜ்வாடி கட்சியைத் தனது கூட்டணிக் கட்சியாக வைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை’’ என பேசினார். இதன் மூலம் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in