இரட்டை மொழிக்கொள்கை தான் தமிழகத்திற்கு ஆதாரம் : ஓபிஎஸ்

இரட்டை மொழிக்கொள்கை தான்
தமிழகத்திற்கு ஆதாரம் : ஓபிஎஸ்

"தமிழகத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் இரட்டை மொழிக்கொள்கை தான் ஆதாரமாக உள்ளது. எனவே, ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார்.

அண்ணல் அம்பேத்கரின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாவின் இரட்டை மொழிக் கொள்கை ஆதாரமாக உள்ளது. எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி, தமிழ் தாய்மொழி "என்று உறுதிபட தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in