தலைவர் அண்ணாமலைக்கு நன்றி : பாஜகவினருக்கு ஷாக் கொடுத்த டாக்டர் சரவணன்!

தலைவர் அண்ணாமலைக்கு நன்றி : பாஜகவினருக்கு ஷாக் கொடுத்த டாக்டர் சரவணன்!

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்கு அண்ணாமலைக்கு நன்றி என டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்ற போது அவரது காரின் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று நள்ளிரவு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் சந்தித்து காலையில் நடந்த காலணி வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். அத்துடன் பாஜகவில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சிக் கொள்கைக்கும், கோட்பாட்டிற்கும் எதிராக நடந்து கொண்ட அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாக்டர் சரவணன் கூறுகையில், “என்னை பாஜகவில் இருந்து நீக்கியதற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in