காதணி விழாவுக்குப் போவதெல்லாம் மேயரின் செயல்திட்டமா?

சண்.ராமநாதன்
சண்.ராமநாதன்

மேயர் அங்கியுடன் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்ததால் சர்ச்சையில் சிக்கியவர் தஞ்சை மேயர் சண்.ராமநாதன். அதேபோல், மேயர் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் ‘நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்வையிடுதல்’ என்று பகிரங்கமாகப் போட்டு பலரது விமர்சனத்துக்கு ஆளானவர். இப்படி அடிக்கடி சர்சையில் சிக்கும் ராமநாதன், தினமும் தனது சமூகவலைதள பக்கத்தில் ‘மாநகரட்சி நிகழ்வுகளுக்கான நிகழ்ச்சி நிரல்’ என்று குறிப்பிட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் அதிகம் இடம் பெறுவது, காதணி விழாவில் கலந்துகொள்ளுதல், திருமண விழாவில் கலந்துகொள்ளுதல், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, மணி விழா போன்றவற்றில் கலந்துகொள்ளுதல் என்பதான அறிவிப்புகளாகவே இருக்கிறது.

“மேயர் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தனிப்பட்ட முறையில் அறிவிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழக அரசு மற்றும் தஞ்சை மாநகராட்சி சின்னங்கள் அடங்கிய அறிவிப்புப் பட்டியலில் இவரின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிடுவது இங்கிதமா?” எனக் கேட்கிறார்கள் தஞ்சை மக்கள். நெட்டிசன்களும் மேயரின் போக்கை, கண்டபடி கலாய்க்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின்கூட தான் கலந்துகொள்ளும் அரசு சாரா நிகழ்ச்சிகளில் அரசு அடையாளங்களைப் பயன்படுத்துவதில்லை. இவர் ஏன் இப்படி அலப்பறை செய்கிறார்?” என திமுகவினரும் சண்.ராமநாதனை சகட்டுமேனிக்கு வறுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in