அசத்துகிறது தஞ்சை: தமிழகத்திலேயே கடன் இல்லாத மாநகராட்சியாக திகழ இதுதான் காரணம்

மாநகராட்சி மேயரும், ஆணையரும்
மாநகராட்சி மேயரும், ஆணையரும்

தமிழகத்தில் உள்ள  20 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத முதல்  மாநகராட்சியாக  உருவெடுத்து அசத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்  மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.  இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கூட்டத்தில் விவாதித்தனர். 

பின்னர் மேயர் சண்.ராமநாதன் பேசுகையில் " தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் முதன்முதலாக தஞ்சாவூர் மாநகராட்சிதான் கடன் இல்லாத மாநகராட்சியாக  உருவெடுத்துள்ளது. இதுவரை மாநகராட்சி சார்பில் இருந்த அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டு விட்டன. மாநகராட்சி கடைகளின் டெண்டர் வெளிப்படை தன்மையாக நடந்ததால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தது. இன்னும் பல்வேறு வணிக வளாகங்கள் கட்டப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. 

இதன் மூலம் மாநகராட்சிக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும். அப்போது மாநகராட்சி மேலும் வளர்ச்சி அடையும். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்றார். இதற்கு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றும் சரவணக்குமார்,  தனது அதிரடி நடவடிக்கைகளால் மாநகராட்சியின் சொத்துகளை மீட்டு எடுத்ததுடன், ஆராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள்,  கடைகளுக்கு  நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்ததால் மிக அதிக அளவில் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்தது.  அதன் மூலம் மாநகராட்சியின் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் இல்லாத  மாநகராட்சியாக தஞ்சை உருவெடுத்துள்ளது. இது  தஞ்சை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in