காலிச் சேர்களிடம் கம்பீரமாக முழங்கிய வைகைச்செல்வன்!

காலிச் சேர்களிடம் கம்பீரமாக முழங்கிய வைகைச்செல்வன்!

வைத்திலிங்கம் போனாலும் தஞ்சையில் அதிமுக கட்டுக்கோப்பாக இருப்பதாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கிடுகிறாராம் முன்னாள் அமைச்சர் காமராஜ். அந்த வகையில், நேற்று இரவு அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறப்புப் பேச்சாளர் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன். விழாவை சிறக்க வைப்பதற்காக வழக்கம் போல பக்கத்து கிராமங்களில் இருந்து ‘பெய்டு தொண்டர்’களை 'பேமென்ட்’ கொடுத்து அழைத்து வந்திருந்தார்கள். அப்படி ‘கவனித்து’ வந்தவர்கள் அரை மணி நேரத்துக்கு மேல் அந்தத் திடலில் தங்கவில்லை. அடுத்தகட்ட தேவைகளுக்காக ஆங்காங்கே நகர ஆரம்பித் தார்கள். காமராஜ் மைக் பிடித்தபோது முக்கால்வாசிக் கூட்டம் கரைந்துவிட்டது. இதனால் கடுப்பாகிப் போய், பேச வந்ததும் மறந்து (!?) சுருக்கமாகப் பேசிமுடித்துவிட்டு அமர்ந்துவிட்டார் காமராஜ். இவருக்கே இந்த நிலை என்றால் இறுதியாக வைகைச் செல்வன் பேசவந்தபோது அதிலும் கொஞ்சம் கூட்டம் காணாமல் போய்விட்டது. இருந்தாலும், மேடையில் அதிமுக தலைகள் சேருக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்க, எதிரே கண்ணுக் கெட்டிய தூரம் வரை தெரிந்த காலிச் சேர்களைப் பார்த்து கம்பீரமாக முழங்கிவிட்டுப் போனார் வைகைச்செல்வன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in