திமுகவால் கைவிடப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ திட்டம்... தெலங்கானாவில் கையிலெடுக்கிறது காங்கிரஸ்!

திமுகவால் கைவிடப்பட்ட ‘தாலிக்கு தங்கம்’ திட்டம்... தெலங்கானாவில் கையிலெடுக்கிறது காங்கிரஸ்!
Updated on
2 min read

தெலங்கானா சட்டசபை தேர்தலில் திருமணமாகும் பெண்களுக்கு 'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன பல தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். காங்கிரஸுக்கு இணையாக ஆளும் பிஆர்எஸ் இடங்களைப் பெறும்; பெரும்பான்மைக்கு பாஜகவின் உதவியை பிஆர்எஸ் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன சில கருத்து கணிப்புகள்.

தெலங்கானா காங்கிரஸ்
தெலங்கானா காங்கிரஸ்

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி, குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும்; அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்; தெலங்கானா தனி மாநில அமைக்க போராடியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும்; வீடுகட்ட ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்; வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்; விவசாயிகள், குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வழங்கப்படும்; விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 நிதி உதவி வழங்கப்படும் என அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. இது அம்மாநில தேர்தல் களத்தில் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தி காங்கிரஸுக்கு பெரும் ஆதரவை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.

தெலங்கானா தேர்தல்
தெலங்கானா தேர்தல்

இந்நிலையில்தான் திருமணமாகும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அறிவிக்க போகிறதாம் காங்கிரஸ். தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இத்திட்டம் மாற்றப்பட்டு புதுமைப் பெண்கள் திட்டமாக, மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது தெலங்கானா காங்கிரஸ், ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் விரைவில் வெளியிடக் கூடும் என்கின்றன அக்கட்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in