பிஆர்எஸ், காங்கிரஸ் தொண்டர்களிடையே பயங்கர மோதல்: கல்வீச்சால் பரபரப்பு!

மோதலில் ஈடுபட்ட பிஆர்எஸ், காங்கிரஸ் தொண்டர்கள்
மோதலில் ஈடுபட்ட பிஆர்எஸ், காங்கிரஸ் தொண்டர்கள்

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்), காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே இன்று பயங்கர மோதல் நடைபெற்றது. ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் ஒரு பெண் உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.

முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் உள்ளது. சந்திரசேகரராவ் முதல்வராக உள்ளார். தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் நவ.3-ம் தேதி தொடங்கியது. நவ.10-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.வாக்குப்பதிவு நவ.30-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட பிஆர்எஸ், காங்கிரஸ் தொண்டர்கள்
மோதலில் ஈடுபட்ட பிஆர்எஸ், காங்கிரஸ் தொண்டர்கள்

இந்த நிலையில், ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்ரெட்டி ரங்கா ரெட்டியும், பிஆர்எஸ் சார்பில் மஞ்சிரெட்டி கிஷன் ரெட்டியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றனர். அப்போது இரு கட்சியினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அப்போது இரண்டு கட்சியினர் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த போலீஸார், கல்வீசியவர்களைத் தடியடி நடத்தி விரட்டினர். இதையடுத்து இப்ராஹிம்பட்டினத்தில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in