எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: திமுக அரசு மீது சந்தேகத்தைக் கிளப்பும் கமல்ஹாசன்!

எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: திமுக அரசு மீது சந்தேகத்தைக்  கிளப்பும்  கமல்ஹாசன்!

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சராக இருந்த போது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் விடப்பட்டதில் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த முறைகேட்டில் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களும் இதில் சிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பல மாதங்களாக பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இவ்விஷயம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன் ?இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, 7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் ” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in