நேரலையில் அதிர்ச்சி... பாஜக வேட்பாளரை அடித்து உதைத்த எம்எல்ஏ; பதறிய நிகழ்ச்சியாளர்கள்

பாஜக வேட்பாளரை அடித்து உதைத்த எம்எல்ஏ
பாஜக வேட்பாளரை அடித்து உதைத்த எம்எல்ஏ

தெலங்கானாவில் தனியார் டிவி நேரலை நிகழ்ச்சியில் பாஜக வேட்பாளரை ஆளும் கட்சி எம்எல்ஏ அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்எல்ஏ விவேகானந்தர் மற்றும் பாஜக வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.

பாஜக வேட்பாளரை அடித்து உதைத்த எம்எல்ஏ
பாஜக வேட்பாளரை அடித்து உதைத்த எம்எல்ஏ

பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்எல்ஏ, பாஜக வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார். இதனை நேரடியாக பார்த்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாஜக சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து தெலங்கானா பாஜக மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்எல்ஏ மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லையென்றால் பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in