
டிசம்பர் மாதம் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கள நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் தமிழிசையிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. தற்போதைய சட்டமன்றத்தில் சந்திரசேகர ராவ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 6 பேரும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 7 பேரும், பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்களும், மற்றவர்களுக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜனை ஆளுநராக நியமித்து முதல்வர் சந்திரசேகர ராவுக்கு குடைச்சல் கொடுத்தது பாஜக. இருந்த போதிலும் சந்திரசேகர ராவ் அடிபணியாமல் ஆட்சி செய்து வந்தார். தெலங்கானாவில் வலுவாக காலூன்ற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனுடைய ரிசல்ட் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தெரியக்கூடும் என்பதால் மிகுந்த கவனம் செலுத்தி பணியாற்றி வருகின்றது பாஜக.
இந்நிலையில், தெலங்கானா மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி தெலங்கானாவில் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கும். மாறாக தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டுகளை பெற்று 63 முதல் 69 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இன்று தெலங்கானா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தெலங்கானாவில் நிலவும் அரசியல் களம் குறித்தும், பாஜக நிர்வாகிகளிடையேயான உட்கட்சி மோதல் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழிசை அமித்ஷாவிடம் அப்டேட் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இனி வரும் காலங்களில் தெலங்கானாவில் பாஜகவின் வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!