அமித் ஷா செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த பாஜக தலைவர்: வெடித்தது சர்ச்சை

அமித் ஷா செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த பாஜக தலைவர்: வெடித்தது சர்ச்சை

தெலங்கானா சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செருப்பை மாநில பாஜக தலைவர் தனது கையால் எடுத்து கொடுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெலங்கானாவில் நடைபெற உள்ள முர்கோவ் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பிரச்சாரத்துக்காக சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கோயிலில் அமித் ஷா தரிசனம் செய்தார். அவருடன் தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் சென்றார். இதனிடையே, தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அமித் ஷாவுக்கு செருப்பை எடுத்துக் கொடுக்க மாநில தலைவர் பண்டி சஞ்சய் விரைந்து செல்கிறார். அவர் அமித் ஷாவுக்கு செருப்பு எடுத்துக் கொடுக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். அதில், "தெலுங்கானா பாஜக மாநிலத் தலைவர் எம்.பி பண்டி சஞ்சய் தனது சகா எம்.பி அமித் ஷாவுக்கு கால் உபகரணம் கொடுக்க விரைகிறார். குலாம்கிரி சிறப்பாக உள்ளது" என்று கிண்டல் செய்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மாநில பாஜக தலைவர் செருப்பு எடுத்துக் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in