
தெலங்கானாவில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விவேகானந்த், காங்கிரஸில் இணைந்திருக்கும் நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு இந்த மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக அங்கு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச்சூழ்நிலையில், பாஜக முன்னாள் எம்.பியும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான விவேகானந்த் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது இந்த முடிவினை அவர் தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய விவேக், காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள விவேகானந்தை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்களில் பாஜகவின் வியூக செயற்பாட்டாளராக விளங்கிய விவேகானந்த், தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மனதில் வைத்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!