
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இன்று மூன்றாவது முறையாக ரயில்வே வேலைவாய்ப்பு நில மோசடி வழக்கில் சிபிஐயின் விசாரணையைத் தவிர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே வேலைவாய்ப்பு நில மோசடி புகாரில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மார்ச் 4 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்வி யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்றாவது நோட்டீஸிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தேஜஸ்வி யாதவின் தந்தையும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. அதுபோல லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மகள்களின் வீடுகளிலும் சில நாட்களுக்கு முன்பு சிபிஐ சோதனை நடத்தியது. இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.