தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர்: 8 வது முறையாக முதல்வரானார் நிதீஷ்குமார்!

தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர்: 8 வது முறையாக முதல்வரானார் நிதீஷ்குமார்!

பிஹாரின் 8வது முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

பிஹார் அரசியலில் அதிரடி திருப்பமாக நேற்று காலை பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதீஷ்குமார், மாலையில் ஆளுநர் பகு சௌகானிடன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார்.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் பாட்னாவில் உள்ள ராஜ்பவனின் நடந்த பதவியேற்பு விழாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு அளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய நிகழ்வில் இவர்கள் இருவர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை பதவியேற்பு இனி வரும் நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகந்பந்தன் கூட்டணியில் தற்போது நிதீஷ்குமார் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் இடதுசாரிகள் மற்றும் ஜிதான் ராம் மஞ்சியின் கட்சி உள்ளிடவையும் அங்கம் வகிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in