பேச்சுவார்த்தைக்கு ஆசிரியர்கள் வர மறுப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் அழைப்பு!

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதனை அடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஆசிரியர்கள் வரவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர், டிட்டோ, ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

அசிரியர்கள் போராட்டம்
அசிரியர்கள் போராட்டம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ, ஆகிய போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதில் ரூ.4.27 கோடி செலவீனத்தை தவிர்த்து இருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ரூ.55 ஆயிரம் செலவில் வழங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018-19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகம் பயன்படுத்தாததால், ரூ.2.15 கோடி செலவில் வழிகாட்டு புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in