நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி.. பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு..!

மயங்கி விழுந்த ஆசிரியை
மயங்கி விழுந்த ஆசிரியை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

நான்காவது நாளாக நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை கர்ப்பிணிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . அவர்களை அழைத்து தமிழக அரசு பேச வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை செயலாளர் ஆகியோர், ஆசிரியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நான்கு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in