
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை விடுவிக்க கோரி இன்று டெல்லியில் அக்கட்சியினர், பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திறன் மேம்பாட்டு குழு ஊழல் தொடர்பாக பதிவான வழக்கில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அக்கட்சியினர் ஆந்திரா மட்டுமின்றி டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்கட்சியின் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய நிலையில், சித்தூரில் அக்கட்சியினர் பிரம்மாண்ட பேரணியும் நடத்தினர்.
இதனிடையே நாளை ஊழல் வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், கட்சியின் அறிவிப்புப்படி, டெல்லியில் இன்று தெலுங்கு தேசம் கட்சியினர் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘நாங்கள் சந்திரபாபு நாயுடுவுடன் உள்ளோம்’ என்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளுடன் ஏராளமான கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!