மதுரை மாநகராட்சி பஸ்ஸ்டாண்ட் கடைகளின் வரிபாக்கி ரூ.1.70 கோடி

மதுரை மாநகராட்சி பஸ்ஸ்டாண்ட் கடைகளின் வரிபாக்கி ரூ.1.70 கோடி

மதுரை மாநகராட்சிக்குச்  சொந்தமான 3 பேருந்து நிலையங்களில் உள்ள கடை உரிமையாளர்களிடம் ரூ.1.70 கோடி வரி பாக்கி உள்ளது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம்,  ஆரப்பாளையம் பேருந்து நிலையம்,  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளன. இங்கு மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான 317 கடைகள் உள்ளன. இவற்றில் 277 கடைகள் தற்போது  செயல்படுகின்றன. இம்மூன்று பேருந்து நிலையங்களில் உள்ள 277 கடை உரிமையாளர்கள்  ஒரு கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370 ரூபாய் வரி பாக்கியை செலுத்தாமல்  உள்ளனர்.  மதுரை மாநகராட்சி 3  பேருந்து நிலையங்களில் ஒரே பேர் 3 முதல் 4  கடைகள்  வாடகைக்கு எடுத்துள்ளனர்.  கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை  வரி பாக்கி வைத்துள்ளனர்.

அரசு போக்குவரத்து அலுவலகம்,  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தாங்கள் நிறுவியுள்ள  ஏடிஎம் மையங்களுக்கு  வரி பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியில்  தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in