தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி நடவடிக்கை
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடைhindu கோப்பு படம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 12,838 பதவியிடங்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 4-ம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 74,383 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். கடந்த 5-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள 12,825 பதவியிடங்களில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவியிடங்களுக்கு 57,778 பேர் களத்தில் உள்ளனர்.

இதனிடையே தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in