தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

`ஊடகத்தினருக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்'- தமிழக அரசை வலியுறுத்தும் தமிமுன் அன்சாரி

தமிழ்நாட்டில் பல்வேறு ஊடகங்களில்  பணியாற்றும் ஊடகத்தினருக்கு பொங்கல் போனஸாக தமிழக அரசு ரூபாய் 2000 வழங்கிட வேண்டுமென்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், `'ஜனநாயகத்தின் விழிகளாகவும், செவிகளாவும் செயல்படும் ஊடகவியலர்களுக்கு பொங்கல் போனசாக தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே கரோனா ஊரடங்கு காலத்தில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிறப்பு ஆணை பிறப்பித்து பத்திரிகையாளர்களுக்கு நிவாரண நிதியாக தலா  ஐந்தாயிரம் வழங்கினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in