‘திராவிடம், தமிழ்த்தேசியம், தமிழன்’ - ஸ்டாலின், சீமான், ஈபிஎஸ்சின் ஒரு வார்த்தை ட்ரெண்ட் என்ன?

‘திராவிடம், தமிழ்த்தேசியம், தமிழன்’ - ஸ்டாலின், சீமான், ஈபிஎஸ்சின் ஒரு வார்த்தை ட்ரெண்ட் என்ன?

உலகம் முழுவதும் ட்விட்டரில் ஒரு வார்த்தை பதிவு ட்ரெண்டாகி வருகிறது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இந்த ஒரு வார்த்தை ட்ரெண்டில் இணைந்துள்ளனர்.

ட்விட்டரில் நேற்று முதலே ‘ஒரு வார்த்தை’ ட்வீட்கள் படு வைரலாக ட்ரெண்டாகி வருகிறது. நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘ டெமாக்ரஸி’ என்ற வார்த்தையை ட்வீட் செய்தார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘கிரிக்கெட்’ என்ற வார்த்தையை ட்வீட் செய்தார். விண்வெளி நிறுவனமான நாசா ‘ யுனிவர்ஸ்’ என்ற வார்த்தையை ட்வீட் செய்தது. இதுபோல அனைத்து நாடுகளின் தலைவர்களும், உலகின் பிரபல நிறுவனங்களும் கூட இந்த ஒரு வார்த்தை ட்வீட்டை பதிவிட்டு வருகின்றனர்.

உலகமே ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டில் மூழ்கியிருக்கும்போது, தமிழகத் தலைவர்கள் மட்டும் எப்படி ஒதுங்கியிருப்பார்கள். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திராவிடம்’ என ட்வீட் செய்தார். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ தமிழ்த்தேசியம்’ என ட்வீட் செய்தார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த ட்ரெண்டில் இணைந்து, ‘ தமிழ்நாடு’ என ட்வீட் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘ தமிழன்’ என ட்வீட் செய்து பரபரக்க வைத்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ‘அம்மா’ என ட்வீட் செய்து அசரவைத்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘ மக்கள்’ என ட்வீட் செய்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்களின் ஒரு வார்த்தை ட்ரெண்ட்டை பின்பற்றி தொண்டர்களும் ஒரு வார்த்தையில் தங்கள் தலைவர்களின் பெயரை ட்வீட் செய்து வருவதால் ட்விட்டரே களைகட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in