`ஆளுநர் தனது பிழையை உணர்ந்து வருந்தியுள்ளார்'- திருமாவளவன்

`ஆளுநர் தனது பிழையை உணர்ந்து வருந்தியுள்ளார்'- திருமாவளவன்

தமிழகம் குறித்த தனது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக ஆளுநர் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநரின் அறிக்கை பகிர்ந்து, ஆளுநர் அளித்துள்ள விளக்கம் திரிபுவாதம் என குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் நாடா? அகமா? என அன்று விவாதத்தை கிளப்பியது குதர்க்கவாதம் என்றும், நான் சொன்னது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என இன்று விளக்கம் அளித்திருப்பது திரிபுவாதம் என குறிப்பிட்டுள்ள திருமாவளவன், தனது பிழையை உணர்ந்து வருந்தி அறிக்கை வெளியிட்டுருக்கிறார் ஆளுநர் என்றும், தமிழ்மக்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டால் சரி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in