மார்ச் 20-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு மார்ச் 20-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20-ம் தேதி 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 20-ம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார். சட்டப்பேரவையில் யார், யாரை எங்கே உட்கார வைப்பது என்பது என்னுடைய முடிவு. அதிமுக எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கெனவே எடுத்த முடிவு தான். வேளாண் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் குறித்து மார்ச் 20-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.

ஆளுநர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் வாயிலாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக் குழு முடிவெடுக்கும். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி கூட உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in