பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்துடன் டெல்லி சென்றார் தமிழ்மகன் உசேன்: எதிர்க்க தயாராகும் ஓபிஎஸ்

தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்துடன் டெல்லி புறப்பட்டார் தமிழ் மகன் உசேன்..!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மற்றும் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம்,பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி வேட்பாளரைத் தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி இருந்த நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

85% பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கடிதத்தை தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சின்னம் யாருக்கு என்ற முடிவினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பாரபட்சமாக நடந்துக் கொண்டுள்ளார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அவர் நடக்கவில்லை என ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in