அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!- ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!- ஈபிஎஸ் அறிவிப்பு

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்றைய அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஏற்கெனவே முன்மொழியப்பட்ட அந்த அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் இரங்கல் தீர்மானமும் அவைத்தலைவர் தேர்வு தீர்மானமும் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.

அவைத்தலைவர் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டதும் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தை ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை வழிமொழிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in