`புரிந்தவர்களுக்குப் புரியட்டும், உச்சம் பெறுவார் தமிழிசை'- உச்ச நீதிமன்ற நீதிபதி சூசகம்!

தமிழிசை, கம்பன் விழா
தமிழிசை, கம்பன் விழா

புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் தலைமையேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், “இந்த மேடையில் பங்கேற்றவர்கள் உச்சம் பெறுவார்கள்” எனத் தமிழிசையை நோக்கி சூசகமாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், “தமிழ் பேசும் ஆளுநர் இந்த நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கிறார். கம்பன் கழக மேடை ஏற்றம் தரும் மேடை. இதற்கு நானே சான்று. 1983-84 ஆண்டில் நான் வழக்கறிஞராக பணியாற்றிய போது இந்த மேடையில் பேசியிருக்கிறேன். 2007லிருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்து பேசியிருக்கிறேன். அதன் பிறகு ஆந்திரா, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்து பேசியிருக்கிறேன். இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பங்கேற்றிருக்கிறேன்.

இந்த மேடை ஏணியை ஏற்றி வைக்கும் மேடை” என்றவர். தமிழிசை இருக்கையை நோக்கி, “குறிப்பாக இந்த மேடையில் உள்ள ஒருவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். புரிந்தவர்களுக்குப் புரியட்டும், புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும். இந்த மேடையில் பங்கேற்றவர்கள் உச்சம் பெறுவார்கள்” என்றார்.

தமிழிசைக்கு குடியரசு தலைவர் பதவி கிடைக்கும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதால், குடியரசுத் தலைவர் பதவி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம் என்கிறார்கள். அந்த வகையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியனியனின் கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in