தமிழகத்தில் திமுக + போலீஸ் + போதைப்பொருள் மாஃபியாக்கள் கூட்டணி... பகீர் கிளப்பும் தமிழிசை செளந்தர்ராஜன்!

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழ்நாட்டில் திமுக, போலீஸார், போதைப் பொருள் மாஃபியாக்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில், தென்சென்னை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பயணம் மேற்கொண்டார். வேலூரில் இறங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ”இன்று வந்தே பாரத் ரயிலில் பயணித்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி பழைய நிறுவனங்களை மாற்றி அமைத்திருக்கிறார். இதுதான் வளர்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியின் அடிப்படையில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால் எதிர் தரப்பினர் பிரிவினை மற்றும் பிரிவினைவாத அரசியலை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்” என்றார்.

தமிழிசை செளந்தர்ராஜன்
தமிழிசை செளந்தர்ராஜன்

மேலும், ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் மாஃபியாவைச் சேர்ந்த ஒருவர் திமுகவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். திமுகவின் கிளை அமைப்பு ஒன்றின் தலைமை பொறுப்பிலும் பதவி வகித்துள்ளார். நேற்றைய தினம் நீதிமன்றம் இதனை கடுமையாக கண்டித்து உள்ளது. போலீஸாருக்கும், போதைப் பொருள் மாஃபியாக்களுக்கும் இடையே கூட்டு இருப்பதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது” என்றார்.

போதைப்பொருட்கள் (கோப்பு படம்)
போதைப்பொருட்கள் (கோப்பு படம்)

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ஆளும் திமுக, காவல்துறை மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்கள் இடையே கூட்டு உள்ளது. இது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது. போதைப்பொருள் கலாச்சாரமும், வன்முறை கலாச்சாரமும், திமுக கலாச்சாரத்துடன் ஒத்துப் போகிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

சென்னையில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 27 டன் வெடிபொருட்கள்... துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in