இதுவரை இந்தப் பக்கமே வரல... தமிழச்சி தங்கபாண்டியனை மறித்து கோஷமிட்ட மக்கள்!

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம்
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம்

பிரச்சாரத்துக்குச் சென்ற இடத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரம் செய்யாமல் பாதியிலேயே திரும்பிச் சென்றார்.

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கே திமுக தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதிக்குள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட   மயிலாப்பூரில் இன்று காலை அவர் திமுகவினருடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாரதிதாசன் நகர் பகுதியில் அவர் பிரச்சாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

தங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும் அவற்றை வந்து பார்த்து தங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.  மேலும், அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிலர், இதுவரை தொகுதி எம்பி உள்ளிட்ட திமுகவினர் யாரும் தங்கள் பகுதிக்கு வரவில்லை,  தங்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தரவில்லை என்றும் கூச்சலிட்டு தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சார வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்கள் சமாதானம் அடையாமல் ஆவேசமாக முழக்கமிட்டவாறே இருந்தனர். அதனால் அந்த பகுதியில் பிரச்சாரத்தை தவிர்த்துவிட்டு தமிழச்சி தங்கபாண்டியன் திரும்பிச் சென்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in