`பிற மொழிகளின் துணையின்றி தனித்துச் செயல்படுகிறது செம்மொழித் தமிழ்'- விருது விழாவில் முதல்வர் பெருமிதம்!

`பிற மொழிகளின் துணையின்றி தனித்துச் செயல்படுகிறது செம்மொழித் தமிழ்'-  விருது விழாவில் முதல்வர் பெருமிதம்!

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் ம.ராஜேந்திரனுக்கு 2020க்கான விருதும், தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் க.நெடுஞ்செழியனுக்கு 2021-ம் ஆண்டுக்கான விருதும், முனைவர் ழான் லூய்க் செவ்வியார் (பிரான்ஸ்)-க்கு 2022ம் ஆண்டுக்கான விருதும் வழங்கினார்.

விருதுகள் வழங்கிய பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிற மொழிகளின் துணையின்றி தனித்துச் செயல்படும் ஆற்றலைக் கொண்டது நம்முடைய செம்மொழித் தமிழ். பழையன கழிந்து புதியன உள்வாங்கும் திறன் கொண்ட தமிழ் மொழி கால மாற்றத்திற்கு ஏற்ற சொற் களஞ்சியத்தைக் கொண்டுள்ள மொழி தமிழ். தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு உயரும் என்ற புரட்சிக் கவிஞரின் வழித்தடத்தில் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அறிவிப்பைக் கருணாநிதி செய்தார். அத்தகைய விருதுகள் மொழியியல் அறிஞர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in