திருக்குறளை அவமதித்தார்: ஆளுநரை கண்டித்து போராட்டம்

சென்னையில் ஆளுநரை கண்டித்து நடைபெற்ற போராட்டம்
சென்னையில் ஆளுநரை கண்டித்து நடைபெற்ற போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி அவரைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்,என்.ரவி, திருக்குறள் மற்றும் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் குறித்து கூறிய சில கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

திருக்குறளை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பல கட்சிகளின் சார்பிலும் அமைப்புகளின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருக்குறள் குறித்து அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை, அண்ணா சாலையில் பனகல் மாளிகைக்கு முன்பாக பழ.நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பழ கருப்பையா, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புக்களும் கலந்து கொண்டனர். இதில் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in