தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை: ஏப்.8-ல் மோடி தொடங்கி வைக்கிறார்

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை: ஏப்.8-ல் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க ஏப்.8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை பெரிதும் குறைத்தாலும், கட்டணம் அதிகம் என்ற விமர்சனமும் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை- கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை - மைசூரு இடையில் அதிவேக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையானது சென்னை - கோவை ஆகிய நகரங்களுக்கு இடையில் வர உள்ளது. இதனை பிரதமர் மோடி ஏப். 8-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

மேலும் ஏப். 8-ம் தேதி அன்று திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையில் 37 கி.மீ தூர அகல ரயில்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் 294 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி தாம்பரம் - செங்கோட்டை இடையில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தையும் மோடி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in