‘முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்துக்கு மீண்டும் தேவைப்படுகிறார்' - அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை
அண்ணாமலை

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரையில் கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை, முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்துக்கு மீண்டும் தேவைப்படுகிறார் என்று கூறியிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர், “தமிழகத்தில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் ஐயா இப்போது மறுபடியும் தேவைப்படுகிறார். அவர் தமிழ் மண் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ, அதை நிச்சயமாக பாஜக செயல்படுத்தும். அவரின் எண்ணங்களை நிறைவேற்றும்” என்றார்.

சென்னை நந்தனத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதேபோல் வி.கே.சசிகலாவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in