ராணி எலிசபெத், முலாயம் சிங் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!

ராணி எலிசபெத், முலாயம் சிங் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்!

இங்கிலாந்து ராணி எலிசபெத், உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் ஆகியோர் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர குமரன் சேதுபதி, இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய ராஜ்ஜியத்தின் ராணி இரண்டாம் எலிசபெத், மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் துன்எஸ்.சாமிவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங், சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி இரா.முத்தையா மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 20-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in