`மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு தன் ஸ்டிக்கரை ஒட்டுகிறது'- சொல்கிறார் மத்திய அமைச்சர்

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு தன் ஸ்டிக்கரை ஒட்டுவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தென்னை விவசாயிகளுடன் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், “இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம். அதனால் தான் மோடி அரசு, விவசாயத்திற்காக பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமங்களை நெடுஞ்சாலைகளுடன் இணைக்கிறோம். இதனால் நாடு முழுவதிலும் எந்த குக்கிராமத்திலும் விளைவிக்கப்படும் விளைபொருளுக்கும் நல்லவிலை கிடைக்கும். பொருட்களும் அனைத்து இடத்திற்கும் சென்று சேரும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் செலுத்துகிறோம்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அவர்களது திட்டம்போல் ஏமாற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் மக்கள் மனதில் இருந்து பாஜக, மோடி என்ற பிம்பத்தை யாராலும் அழிக்க முடியாது. 2026-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தென்னை சாகுபடியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகக் கேரளம் உள்ளது. விவசாயிகளின் குறைகளைக் கேட்க அடிக்கடி இனி வருவேன்” என பேசினார்.

தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று இந்தி திணிப்பிற்கு எதிராக போராடிய நிலையில், மத்திய அமைச்சர் விவசாயிகளைத் திரட்டி திமுகவை ஸ்டிக்கர் ஒட்டுவதாக கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in