தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்: பின்னணி என்ன?

தமிழக ஆளுநர்  திடீர் டெல்லி பயணம்: பின்னணி என்ன?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு மாதமும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு பாஜக மத்திய அமைச்சர்களை அலுவல் ரீதியாக சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6.05 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழ்நாடு சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநில நிலவரம் தொடர்பாக மாதம் தோறும் ஆளுநர் தரப்பில் அளிக்க வேண்டிய அறிக்கைகளையும் பயணத்தின் போது சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் இந்தி எதிர்ப்பு எதிராக  தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாகி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் தீவிரமான இந்தி எதிர்ப்பைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் கேரளா மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு கருத்து பரவி வருகிறது. இந்தி திணிப்பு எதிராக தமிழகத்தில் திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் அக்.15-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி  டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in