டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்: மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு

டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்: மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வர் புகார் அளித்துள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2023-ம் ஆண்டுக்கான முதல் ஆளுநர் உரை அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. ஆளுநர் ரவி, தமிழக அரசு கொடுத்த உரையை படிக்காமல் தன்னிச்சையாக தனது வார்த்தைகளை திணித்தார். இதையடுத்து உடனடியாக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் வாசித்த வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக தனித் தீர்மானம் கொண்டு வந்து அதிரடி காட்டினார். இதைத்தொடர்ந்து ஆளுதா சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக ஆகியிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், குடியரசு தலைவருக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த கடிதத்தை திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு. ஆ.ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் நேரடியாக சென்று குடியரசு தலைவரிடம் வழங்கினர். அப்போது ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழக ஆளுநர் ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் அளிக்கும் விளக்கத்திற்கு பிறகு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து நான் பார்க்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in