‘அவதூறு செய்கிறார் ஆளுநர்’ - வைகோ ஆவேசம்!

‘அவதூறு செய்கிறார் ஆளுநர்’  - வைகோ ஆவேசம்!

“ஆளுநர் அபாண்டமாகவும் அவதூறாகவும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழக மக்களை குழப்புவதற்காகவே அவர் அவ்வாறு செய்கிறார்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார்.

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஆளுநர் அபாண்டமாகவும், அவதூறாகவும் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களைக் குழப்பவே அவர் வந்துள்ளார். பிறந்தநாளும், மறைந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது தேவரின் சிறப்பு. ஆளுநர், தேவரின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வைத்தியநாத ஐயர் முயற்சி செய்தபோது, அதற்கு உறுதுணையாக இருந்தவர் முத்துராமலிங்கத் தேவர் தான். சாதி, மத வேறுபாட்டுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை” என்றார்.

மேலும், “அடுத்து நான் பசும்பொன் செல்கிறேன். கடந்த 46 ஆண்டுகளாக நான் தொடர்ந்து அங்கு செல்கிறேன். மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தபோதும், ஓர் ஆண்டு கரோனா காலத்திலும் மட்டுமே செல்லவில்லை” என்று வைகோ கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in