குறு, சிறு நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ்: 3,217 கோடி வரை மின் கட்டண உயர்வை குறைக்கிறது தமிழக அரசு

குறு, சிறு நிறுவனங்களுக்கு ஹேப்பி நியூஸ்: 3,217 கோடி வரை மின் கட்டண உயர்வை குறைக்கிறது தமிழக அரசு

"குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3,217 கோடி வரை மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கரூர் திருமாநிலையூரில் இன்று நடைபெற்ற புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "கரூர் திருமாநிலையூரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 85 பேருந்துகள் நிறுத்த முடியும். புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்திலிருந்து தற்போதுள்ள பேருந்து நிலையம் 2.1 கி.மீட்டர், ரயில் நிலையம் 3.5 கி.மீட்டர், ஆட்சியர் அலுவலகம் 4.4 கி.மீட்டர், மாநகராட்சி அ லுவலகம் 1.6 மி.மீட்டர் என நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ளது. தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்திலோ அல்லது நடந்தே கூட வந்துவிடும் தூரத்தில் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் இயங்கும்" என்றார்.

இதைத் தொடர்ந்து கரூர் பிரேம் மஹாலில் சிஐஐ சார்பில் நடந்த 13-வது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் கட்டணத்தை குறைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் 3,217 கோடி வரை மின் கட்டண உயர்வை அவர்களுக்கு குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக கரூர் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய அரசு அதிக நிதி தருவதுப்போல கூறுகின்றனர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கொளந்தானூரில் ஏற்கனவே இருந்த அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு தலா 10 லட்சத்தில் கட்டப்படும் 150 வீடுகளில் மாநில அரசு பங்கு 7 லட்சம், மத்திய அரசு பங்கு 1.5 லட்சம், பயனாளிகள் பங்களிப்பு 1.5 லட்சமாகும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in